ஆங்கிலத்தில் ஒரு அருமையான சொற்றொடர் உண்டு.. அது " When the going gets tougher, tough becomes going". உண்மையான வார்த்தைகள் இவை. வாழ்க்கை இல் பிரச்சனைகள் என்பது பிரிக்க முடியாத அங்கம். பிரச்சனைகளை விட்டு விலகி செல்லாமல் அவற்றை நம்மோடு கலந்து விட செய்வதே உண்மையான வெற்றி. பிரச்சனைகளை தள்ளி வைத்திருக்கும் பொது, அவை நம்மை நோக்கி வந்து விடுமோ என்ற அச்சம் இருக்கும், பிரச்னை உங்களுடனே இருக்கும் பொது அந்த பயம் இருக்காது. பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டிய சக்தி வளரும்.
அனேக சமயங்களில் எனக்கு இந்த கவலை வந்தது உண்டு... எனக்கு மேலே, என்னை விட நல்ல நிலைமை இல் இருக்கும் மனிதர்களை பார்த்து , என்னால் அவர்களை போலே இருக்க முடியவில்லையே என்று .... ஆனால் இப்போது எனக்கு இந்த எண்ணம் தோன்றும் பொது, உடனே தோன்றும் இன்னொரு விஷயம் இது தான்.... எனக்கும் கீழே இருக்கும் மனிதனுக்கு எனக்கு கிடைத்தது கூட கிடைக்க வில்லையே என்பது தான். இன்று நான் இருக்கும் நிலைமை இல் என்னை வைத்ததற்கு ஆண்டவனுக்கு நன்றி சொல்கிறேன். நம் வாழ்கையை எப்படி வாழ வேண்டும் என்று முடிவு செய்வதற்கு நமக்கு முழு உரிமை இருக்கிறது... நமக்கு என்னவெல்லாம் கிடைக்க வில்லை என்பதனை நினைத்து புலம்பி கொண்டேவும் இருக்கலாம்... அல்லது கிடைத்தவற்றை நினைத்து மன மகிழ்ச்சியோடும் இருக்கலாம்... இந்த இரண்டில் எதை தேர்ந்தெடுப்பது என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.
ஒரே கால கட்டத்தில், ஒரே இடத்தில் இருக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு வகையான பிரச்சனைகள். இரவு சாப்பாடே கிடைக்குமா என்ற மனிதனுக்கு அருகிலேயே, இரவு சாப்பாடு எந்த ஹோட்டல் லில் சாப்பிடலாம் என்று கவலை படும் மனிதன் இருக்கும் நாடு இது. பிரச்சனையே இல்லாத மனிதனை பார்க்க முடியாது. ஆனால் பிரச்சனைகளை நாம் கையாள வேண்டும்.. பிரச்சனைகள் நம்மளை கையாள விட்டால், வாழ்வில் நிம்மதி குறையும்.
உலக ஜீவராசிகள் அனைத்திற்கும் ஏதோ ஒரு பிரச்னை இருக்கத்தான் செய்யும்... பிரச்சனைகள் வாழ்வின் முடிவல்ல.. அவை வாழ்வின் ஒரு அங்கம்... அவற்றை இதமாக எதிர்கொள்வோம் ... வாழ்க்கை பயணத்தை எளிதாக்க முயல்வோம் !
அன்புடன்,
பெருமாள்.