Saturday, December 26, 2009

இப்படியும் ஒரு தீண்டாமை

சென்னை மாநகரின் ஒரு அடுக்கு மாடி குடி இருப்பின் ( எங்கள் குடி இருப்பு தான்) அறிவிப்பு பலகை இல் கீழ் கண்ட செய்தி -

" We are happy to inform that upon our communications made to the flat owners, two flat owners had taken necessary steps to vacate the bachelors stayed in their falts. We expect a postive response from other 4 flat owners also."

தனிக்கட்டை யாக ... நல்ல சாப்பாடு இல்லாமல் .... காய்ச்சல் , தலை வலிக்கு கூட மருந்திட யாரும் இல்லாமல் ... பிழைப்புக்காக எங்கிருந்தோ சென்னை வந்து வாழும் எங்களுக்கு இது தான் நிலைமை. என்ன தான் கோபமோ எங்கள் மேல் இவர்களுக்கு.. ஏதோ தெரு நாய்களை துரத்துவது போல் துரத்துகிறார்கள். எந்த வித காரணமும் இல்லாமல் நாங்கள் bachelors என்கிற ஒரே காரணத்தால் எங்களை வெறுத்து துரத்துகின்ற இதுவும் ஒரு தீண்டாமை தானே? யாரிடம் சொல்வது நாங்கள்?
எங்கள் flat owner இன்று வரை எங்கள் பக்கம். அவர் எங்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு கோடானு கோடி நன்றி !

மீண்டும் வருத்ததுடன்,
பெருமாள்

Wednesday, December 23, 2009

இவ்ளோ தான் நாங்கள் !

இன்று டைடெல் பார்க்கில் வருடாந்திர சோதனை தீ விபத்து பயிற்சி நடந்தது. இது குறித்து முன் கூடியே அனைவருக்கும் அறிவிப்பு செய்திருந்தார்கள் நிர்வாக அதிகாரிகள். பொதுவாக இது போன்ற பயிற்சி நடத்துவதின் முக்கிய நோக்கம் , தீ விபத்து நேரத்தில் அனைவரையும் கட்டிடத்தில் இருந்து வெளியேற்ற ஆகும் நேரத்தை கணக்கிடவே. எனவே குறிப்பிட்ட நேரத்தில், அறிவிப்பு வந்தவுடன் அனைவரும் படிகளில் இறங்கி கீழ் தளத்தை அடைய வேண்டும். இது தான் பயிற்சி இல் நாங்கள் செய்ய வேண்டியது .

ஆனால் நடந்தது என்னவென்றால், குறிப்பிட்ட நேரம் நெருங்கும் போது , எனது மென் பொருள் வல்லுன நண்பர்கள் ( இந்த கூட்டத்தின் பெரும் பகுதி ப்ராஜெக்ட் மேனேஜர்கள் !!) அனைவரும் கூட்டம் கூட்டமாக கிளம்பி மின் தூக்கி மூலமாக கீழ் தளத்தை அடைந்து விட்டனர். எனவே வெகு குறைவான மக்களே எதிர்பார்த்த மாதிரி படிகள் மூலமாக கீழே வந்தோம். ஆகா மொத்தம் டைடெல் நிர்வாக அதிகாரிகள் இரண்டு நாட்கள் திட்டமிட்ட பயிற்சியை எங்கள் மக்கள் இரண்டே நிமிடத்தில் தொலைத்து விட்டார்கள்.

என்ன தான் படித்தாலும்... என்ன தான் பெரிய பெரிய பதிவிகள் வகித்தாலும் ... நாங்கள் இவ்ளோ தான்...

வருத்ததுடன்,
பெருமாள்

Sunday, December 20, 2009

முதல் பிரசவம் !

அன்புடையீர்,

இனிய வணக்கங்கள். நெடு நாளைய ஆசை ... கடந்த வாரம் ஒரு வழியாக ப்ளாக் உருவாக்கினேன் . இரு நிமிட வேலை தான்... ஆனால் இரண்டு மாதம் ஆனது எனக்கு. மீண்டும் ஒரு முறை என் சோம்பேறித்தனத்தை எண்ணி விரசப்பட்டேன்.

சமீப காலமாக சில சம்பவங்களை பார்க்கும் போது தோன்றும் கருத்துக்களை யாருடனாவது பகிர்ந்து கொள்ள தோன்றும்... கல்லூரி காலம் வரை நண்பர்கள் இருந்ததால் உடனே பகிர்ந்து கொள்ள முடிந்தது.. இப்போது அவனவன் வேறு வேறு ஊர்களில்.. வாரம் ஒருமுறை பேச மட்டுமே முடிகிறது.. இது தான் ப்ளாக் எழுத உந்துசக்தி !

ஒன்று சொல்லியே ஆக வேண்டும்... முதல் பிரசவம் ... மிகவும் கடினம் ... மறு பிழைப்பு. ( இந்த நான்கு வரிகளை எழுத அரை மணி நேரம் ஆனது எனக்கு.. இந்த அரை மணி நேரத்தில் ஒரு 4 அல்லது 5 முறை ப்ளாக் எழுதுவதை இன்றோடு விட்டு விடலாமா என்று நினைத்தேன் .... 4 அல்லது 5 முறை மறு பிழைப்பு ! )

விரைவில் சந்திப்போம் !
இனிய வார இறுதி அனைவருக்கும் .

அன்புடன்,
பெருமாள்

Sunday, December 13, 2009

Test Post

Test Post !

Regards,
Perumal