Wednesday, December 23, 2009

இவ்ளோ தான் நாங்கள் !

இன்று டைடெல் பார்க்கில் வருடாந்திர சோதனை தீ விபத்து பயிற்சி நடந்தது. இது குறித்து முன் கூடியே அனைவருக்கும் அறிவிப்பு செய்திருந்தார்கள் நிர்வாக அதிகாரிகள். பொதுவாக இது போன்ற பயிற்சி நடத்துவதின் முக்கிய நோக்கம் , தீ விபத்து நேரத்தில் அனைவரையும் கட்டிடத்தில் இருந்து வெளியேற்ற ஆகும் நேரத்தை கணக்கிடவே. எனவே குறிப்பிட்ட நேரத்தில், அறிவிப்பு வந்தவுடன் அனைவரும் படிகளில் இறங்கி கீழ் தளத்தை அடைய வேண்டும். இது தான் பயிற்சி இல் நாங்கள் செய்ய வேண்டியது .

ஆனால் நடந்தது என்னவென்றால், குறிப்பிட்ட நேரம் நெருங்கும் போது , எனது மென் பொருள் வல்லுன நண்பர்கள் ( இந்த கூட்டத்தின் பெரும் பகுதி ப்ராஜெக்ட் மேனேஜர்கள் !!) அனைவரும் கூட்டம் கூட்டமாக கிளம்பி மின் தூக்கி மூலமாக கீழ் தளத்தை அடைந்து விட்டனர். எனவே வெகு குறைவான மக்களே எதிர்பார்த்த மாதிரி படிகள் மூலமாக கீழே வந்தோம். ஆகா மொத்தம் டைடெல் நிர்வாக அதிகாரிகள் இரண்டு நாட்கள் திட்டமிட்ட பயிற்சியை எங்கள் மக்கள் இரண்டே நிமிடத்தில் தொலைத்து விட்டார்கள்.

என்ன தான் படித்தாலும்... என்ன தான் பெரிய பெரிய பதிவிகள் வகித்தாலும் ... நாங்கள் இவ்ளோ தான்...

வருத்ததுடன்,
பெருமாள்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.