Sunday, October 31, 2010

இப்போது எனக்கு வேண்டிய வைத்தியம் !

மோகத்தைக் கொன்றுவிடு , அல்லா லென்றன் மூச்சை நிறுத்திவிடு
தேகத்தைச் சாய்த்துவிடு , அல்லாலதில் சிந்தனை மாய்த்துவிடு
யோகத் திருத்திவிடு , அல்லா லென்றன் ஊனைச் சிதைத்துவிடு
ஏகத் திருந்துலகம் , இங்குள்ளன யாவையும் செய்பவளே !

                                                                                                                                                                                         பந்தத்தை நீக்கிவிடு , அல்லாலுயிர்  பாரத்தைப் போக்கிவிடு
சிந்தை தெளிவாக்கு  , அல்லாலிதைச் செத்த உடலாக்கு
இந்தப் பதர்களையே , எல்லாமென எண்ணி இருப்பேனோ
எந்தப் பொருளிலுமே , உள்ளேநின்று இயங்கி யிருப்பவளே !

                                                                                                                                                                     
 உள்ளம் குளிராதோ , பொய்யாணவ ஊனம் ஒழியாதோ?
கள்ளம் உருகாதோ , அம்மா பக்திக் கண்ணீர் பெருகாதோ?
வெள்ளக் கருணையிலே , இந்நாய் சிறு வேட்கை தவிராதோ?
விள்ளற் கரியவளே  , அனைத்திலும் மேவி யிருப்பவளே!

 நன்றி - பாரதியார்

மோகத்தை கொல்வது எழிதல்ல. ஆனால் கொன்றே தீர வேண்டும். அன்னை பராசக்தி அந்த சக்தியை எனக்கு அருள்வாள் என்று நம்புகிறேன்.

அன்புடன்,
பெருமாள்
                                                                                                                                                                                                                           



Friday, October 1, 2010

என்ன கொடுமை சரவணன் இது !!

தன் காதலனை டெஸ்ட் செய்ய இந்த பொண்ணு என்ன பண்ணுது பாருங்க ....
http://www.youtube.com/watch?v=9ChKHoB-xno&p=9CA377CD5FA370C6&playnext=1&index=85

இனிமேல் இந்த வஸ்துவை பயன்படுத்தும் நவ நாகரீக அம்மணிகளை பார்த்து ஒரு கேள்வியை தாராளமாக கேட்கலாம்.. என்ன அது ????  இது தான் - " என்ன *** புடுன்குரீங்களா? "    ஹா ஹா ஹா

ஒரே காமெடி !!

அன்புடன்,
பெருமாள்.

Sunday, August 15, 2010

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

நண்பர்களே,

சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்!
ரத்தம் சிந்தி கிடைத்த சுதந்திரத்தை வியர்வை சிந்தியாவது காப்பாற்றுவோம்!
வந்தே மாதரம்!

அன்புடன்,
பெருமாள்.

Saturday, July 24, 2010

தனி மனித வழிபாடு - அறுத்தெறிய பட வேண்டிய களை

கடந்த பத்து வருடங்களுக்குள் நம் நாட்டில் உருவெடுத்து வளர்ந்துள்ள மடங்கள், ஆசிரமங்களின் எண்ணிகையை பார்த்தால் மயக்கம் வருகிறது. எங்கிருந்து வந்தார்கள் இந்த நவ யுக சாமியார்கள் / சாமியரினிகள் ?? என்ன தான் வேண்டும் இவர்களுக்கு ???

இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே இவர்கள் என்ன புரோக்கர்களா ? இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே எந்த காலத்திலும் புரோக்கர்கள் தேவை இல்லை. ஆனால் இறைவன் பெயரால் பணம் சம்பாதிக்கும் புரோக்கர்கள் இவர்கள். இவர்களில் எத்தனை பேர் எளிமையான வாழ்கை வாழ்கிறார்கள் ? எத்தனை பேர் தங்கள் பெயரில் "அறகட்டளை" வைத்து கல்வி, மருத்துவம் இவற்றில் காசு பார்க்காமல் இருக்கிறார்கள்? இதில் இவர்கள் எங்கு சென்றாலும் இவர்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு. இருபது முப்பது கார்கள், காமெராக்கள் , மாலை , மரியாதை , மண்ணாங்கட்டி என எல்லா கருமம் வேறு ! தனி மனித வழிபாடு என்பது அறுத்தெறிய பட வேண்டிய களை.

எந்த மதமும் தனி மனித வழிபாடை முன்னிருதியதே கிடையாது. ஆனால் இறைவன் பெயரால் இந்த கூட்டம் மக்களை வர வைத்து , அவர்களையே வழிபட செய்து கொண்டிருகிறது. எங்கும் செயற்கை , எதிலும் செயற்கை.. என்று ஆகிவிட்ட நிலை , எனவே இறைவனை வழிபடவும் நம் மக்களுக்கு செயற்கைய ப்ரோகேர்கள் தேவை போல.. இந்த ப்ரோகேர்களை பாசமாக அம்மா, அப்பா , அய்யா என்று கூப்பிடுவதில் நம் மக்களுக்கு ஒரு செயற்கை ஆனந்தம் ! பதிலுக்கு அவர்களும் ஒரு செயற்கை புன்னகை ! எல்லாம் செயற்கை ஆகின பிறகு இவர்கள் காணும் இறை கூட செயற்கை தான் என்பதை உணர வேண்டும் நம் மக்கள். கொடுமையான விஷயம் என்ன வென்றால் இந்த "நவ யுக இறை ப்ரோகேர்கள் " வைக்கும் பொறி இல் சிக்குவது படித்த அறிவாளிகள் (முட்டாள்கள்) !!

ஒரு வழியாக நித்தியானந்த பிடிபட்டார்.. இன்னும் சில நாட்களில் எல்லாரும் பிடிபடுவர். அது வரை இவர்கள் அடிக்கும் கூத்தை சகித்து கொள்ளத்தான் வேண்டும். எளிமை இல் இறைவனை தேடாமல் , எங்கோ தேடும் செம்மறி ஆடு கூட்டமாகி போனது நம் மக்கள் கூட்டம்.

வருத்ததுடன்,
பெருமாள்.

கம்பன் ஒரு வித்தன் - பாகம் 4

பாடல்:
மூக்கில் தாக்குறும் மூரி நந்தும், நேர்
தாக்கின் தாக்குறும் பறையும், தண்ணுமை
வீக்கின் தாக்குறும் விளியும், மள்ளர்தம்
வாக்கின் தாக்குறும் ஒலியில் மாயுமே.


பொருள்:
மூச்சை பிடித்து பேரொலியுடன் ஊதப்படும் சங்கின் ஒலியும், பறைபோன்ற தோற்கருவிகளில் குச்சிகளை கொண்டு எழுப்பப்படும் ஒலியும், கைகளால் தட்டப்பட்டு வாசிக்கப்படும் தோற்கருவிகளின் ஒலியும், எல்லாமும், உழவர்கள் தங்களுடைய மாடுகளை நிலத்தில் (உழுவதற்காக) விரட்டி அதட்டும் ஓசையில் அடங்கிவிடுகின்றன.
மேல் சொன்ன அனைத்து இசை கருவிகளில் இருந்தும் உண்டாகும் ஒலி, அவ்வூரில் உள்ள உழவர்கள் தங்கள் மாடுகளை உழுதொழிலில் ஈடுபடுத்தும் பொது விரட்டி அதட்டும் சப்தத்தில் அடங்கி விடுகிறதாம் !! அவ்வூரில் உழவு தொழிலில் ஈடுபட்டுள்ள உழவர்களின் எண்ணிக்கையை சிறப்பாக காட்ட கம்பன் கட்டும் வித்தை தான் இது !

அன்புடன்,
பெருமாள்.

Sunday, July 18, 2010

இது தான் பெண் உரிமையா?

சமீப காலங்களில் நான் அடிக்கடி பலரிடம் கேட்கும் சொல் "பெண் உரிமை" . அவர்களில் பலரின் பார்வையில் பெண் உரிமை என்பது "பெண்கள் அவர்களின் சமுதாய/குடும்ப கடமைகளை மறக்க கிடைக்கும் அனுமதி " என்பதாகும் . வருத்தத்திற்கு உரிய செய்தி இது.

சமுதாயமும், குடும்பமும் ஆண் , பெண் என்ற இரண்டு பெரிய பங்கு தாரர்களை உள்ளடக்கியது. இதில் இந்த இரு பிரிவினருக்கும் கடமைகளும், உரிமைகளும் உள்ளன. உங்கள் உரிமைகள் கடமைகளை மறக்கடிக்க விடுதல் ஆரோகியமான மாற்றம் அல்ல. உரிமைகளை கட்டுக்கோப்பின்றி அவிழ்த்து விட்ட எந்த சமுதாயமும் நல்ல வளர்ச்சியை கண்ட தில்லை.
பெண் உரிமை என்ற உடனே, அமெரிக்க சமுதாயத்தை மேற்கோள் கட்டும் பலரை நான் பார்க்கிறேன். அமெரிக்க பெண் உரிமை பாகுபாடு இல்லாதது. அவர்களின் பெண் உரிமை போராட்ட வரலாறு உன்னதமானது. ஜனநாயக வாழ்வின் அடிப்படை உரிமையான வாக்குரிமை கூட அமெரிக்க பெண்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது. அடிப்படி உரிமைக்காக போராடியது அமெரிக்க பெண்கள் சமுதாயம். போராடி வெற்றியும் பெற்றது. அவர்கள் "இட ஒதுக்கீடு" கேட்க வில்லை. பெண்கள் சிறப்பு பேருந்து கேட்கவில்லை. அவர்களின் தன்னம்பிக்கை வணக்கத்திற்கு உரியது. இன்றும் அமெரிக்க குடும்பங்களில் சமையல் என்பது பெண்களின் ராஜ்ஜியமாகவே உள்ளது. தங்களின் அன்பானவர்களுக்கு சமைத்து குடுப்பதேன்பது அமெரிக்க தாய்மார்களின் பேரானந்தம். அவர்களுக்கும் வேலை பளு உண்டு. அதை காரணம் காட்டி அவர்கள் தங்களின் கடமையில் இருந்து தப்பித்து கொள்ள வில்லை. அவர்களின் கடமையை மனபூர்வமான மகிழ்ச்சியோடு செய்கிறார்கள்.

சமையல் என்ன பெண்களின் சாபக்கேடா? என்று கேட்பது தான் இங்கு பெண் உரிமை. பெண்களுக்கு எங்கு சென்றாலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று முழங்குவது தான் இங்கு பெண் உரிமை. நமக்கு ஒத்து வருகிறதோ இல்லையோ, அரை குறை ஆடை அணிவது தான் இங்கு பெண் உரிமை. ஆண்கள் செய்யும் அனைத்தையும் செய்வது தான் பெண் உரிமை ( தம், தண்ணி உட்பட). இத்தனை நாட்கள் இவர்களின் பெண் உரிமை "போராட்டங்கள்" சாதித்தது மேல் தட்டு வர்க்கத்து பெண்களின் திமிரின் வெளிப்பாடுகளே. இன்னும் கீழ் நிலையம் உழழும் என் சகோதிரிகளின் வாழ்வில் எந்த மாற்றமும் இல்லை. பெண் சமுதாயத்தின் ஒரு பகுதி மட்டும் பெண் உரிமை என்ற பெயரில் கொக்கரித்து கூத்தடித்து கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை. பெண் உரிமை என்ற பெயரில் ஆதாயம் தேடும் இந்த கையாலாகத கூட்டத்தை பார்த்து நான் வெக்க படுகிறேன்.

பெண்களே, உங்களுக்கு உரிமை தர ஆண் சமுதாயம் ஒன்றும் கடவுள் அல்ல. அடிப்படை மனித உரிமை யாருக்கு மறுக்க பட்டாலும் அது கொடுமையே. பெண் என்ற பெயரில் சிறப்பு உரிமைகளையும் சலுகைகளையும் நீங்கள் எதிர் பார்பது உங்களின் நொண்டி தனமே. அதிலும் உரிமை என்ற பெயரில் உங்கள் கடமையை மறப்பது உங்களுக்கு அழகல்ல. இறைவனின் படைப்பில் மிக உன்னதமானவை ஆண்மை மற்றும் பெண்மை. இந்த இரண்டிலும் மேன்மையானது பெண்மையே ! அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அனால் அந்த மேன்மையான குணத்தை உங்களில் நிறுத்திக்கொள்ள உங்களை உரியவர்கள் ஆக்கி கொள்வது உங்கள் கடமை. அதை மறந்தால், பெண்மைக்கு உரிய மேன்மை உங்களை விட்டு செல்லும், அதனுடன் பெண்மையால் உங்களுக்கு கிடைத்த மரியாதையும் தான் !

எனது தாழ்மையான வேண்டுகோள் இது தான்... பெண் உரிமை என்ற பெயரில் உங்களின் கடமையை மறந்து, மேன்மையான பெண்மை குணத்தை இழந்து , உங்கள் மதிப்பை நீங்களே கெடுத்து கொள்ளாதீர்கள்.

"நீங்கள் யாரிடம் அதிகம் மரியாதை வைத்திருக்கிறீர்களோ , அவர்கள் தவறு செய்தால் உங்களுக்கு கோபம் இரண்டு மடங்கு வரும்" . இதே நிலை தான் எனக்கு இந்த விஷயத்தில். பெண்மை என் உள்ளத்தில் உயர்ந்த இடத்தில் வீற்றிகும் உன்னதமான ஒரு விஷயம். அதை பெண்களே உதாசீனப்படுத்தும் போது என் கோபம் பல மடங்கு ஆகிறது.

வருத்ததுடன்,
பெருமாள்.

Monday, July 12, 2010

உங்கள் உதவி நாடி !

இட்லி வடையில் வந்த செய்தி இது.
நம்பதகுந்தது என்பதால் இங்கும் இடுகிறேன். உங்கள் உதவி போற்ற தக்கது.

வங்கி கணக்கு:
67063085622 - State Bank of Travancore (மதுரை மெயின்)- S. Petchiprema.

உங்களின் சிறிய உதவி, இம்மாணவிக்கு வெளிச்சம் தரும் .

நன்றி.

அன்புடன்,
பெருமாள்.

Sunday, June 27, 2010

கம்பன் ஒரு வித்தன் - பாகம் 3

பாடல்:
ஆளும் அன்னம் வெண் குடைக் குலங்களா, அருங் காரக்
கோள் எலாம் உலாவுகின்ற குன்றம் அன்ன யானையோ,
தாள் உலாவு பங்கயத் தரங்கமும் துரங்கமா,
வாளும், வேலும், மீனம் ஆக, மன்னர் சேனை மானுமே.

பொருள்:
அயோத்தி மாநகர கோட்டை அகழியில் நீந்தும் அன்ன பறவைகள் (அரசனுடைய) வெண்கொற்றக் குடைகளாகவும்; முதலைகள் கிரகங்களெல்லாம் சுற்றிவரும் பெரிய மலைகளை போன்ற யானைப் படைகளாகவும்; வீசும் அலைகளில் அலைவுறும் தண்டுகளை கொண்ட தாமரை மலர்களே குதிரைப் படைகளாகவும்; அங்கு நீந்தித் திரிகின்ற மீன்களே வாளாகவும், வேலாகவும் தோற்றமளித்து, அந்த அகழியே மன்னனுடைய தேர், யானை, குதிரை, காலாள் என்ற நால்வகைப் படையாகத் திகழ்ந்தது.

மீன்களை வேலுக்கும் வாளுக்கும் உவமையாகப் பயன்படுத்தியிருக்கும் கம்பன் வித்தன் தானே !!!

அன்புடன்,
பெருமாள்.

Sunday, June 20, 2010

ராவணன் - எனக்கு புரிந்தது

ரொம்ப நாளைக்கு பிறகு , நண்பனின் அன்பு தொல்லையால் ராவணன் படம் பார்க்க ஒத்து கொண்டேன். படம் பார்க்கும் முன்பு எனக்கு படத்தை பற்றிய எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அது ஒரு வகையில் நல்லதே, இல்லை எனில் படம் பார்த்த பின் ஏமாற்றத்தின் அளவு இரு மடங்காக இருந்திருக்கும்.

படத்தில் திரை கதை என்று ஒன்று இருந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. போலீஸ் கற்பழித்து விடும் ஹீரோ (ராவணன்!!!) தங்கை... வழக்கம் போல் அண்ணனிடம் பொலம்பி விட்டு, தற்கொலை செய்து கொள்கிறாள். உடனே "வீரா"வேஷம் போட்டு பழிவாங்க புறப்படும் அண்ணன். பழிவாங்க போலீஸ் அதிகாரி உடைய பொண்டாடியை கடத்தி கொண்டு வந்து காதலிக்கிறார் ஹீரோ !!! ( என்னங்கட சாமி லாஜிக் இது !!!)

வழக்கம் போல போலீஸ் அதிகாரி பொண்டாடியை தேடி வர, நம்ம ஹீரோவை நல்லவராக காட்டுவதற்கு சில காட்சிகள். அப்புறம் ஏதோ சில பல டயலாக் பேசி ஹீரோ சென்று விட, அதிகாரி பொண்டாடியை கூடி கொண்டு "வீரா " வை பிடிக்க முடியாத வருத்ததுடன் செல்கிறார். அப்புறம் பயங்கரமா யோசிச்சு பொண்டாட்டிய கடுப்பேத்தி "வீரா" இருக்கும் இடத்துக்கு அனுப்பி வைத்து, அவரும் ஒரு பெரிய படையுடன் பின்னாடி வர, நம்ம "வீரா" அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஆசைப்பட்டு வெளிய வந்து அதிகாரி கிட்ட சிக்கி செத்துபோரன். இவ்ளோ தான் கதை.

எனக்கு இந்த படத்துல இருந்து புரிஞ்சது ரெண்டு விஷயம்,

  1. அடுத்தவன் பொண்டாட்டிய கரெக்ட் பண்ண, அந்த பொண்ண கடத்திட்டு வந்து ஒரு பத்து நாள் நல்ல சந்தோசமா வச்சுருந்தா போதும.
  2. ஆனா அப்டியே கரெக்ட் பண்ணினாலும், "மாற்றான் மனைவி மேல் ஆசை" பட்ட பாவத்துக்கு, அவளோட புருஷன் கையாலேயே செத்து போகணும்.

எனக்கு ரெண்டு விஷயமுமே பிடிச்சுருக்கு ! உங்களுக்கு???

அன்புடன்,

பெருமாள்

Wednesday, June 2, 2010

கம்பன் ஒரு வித்தன் - பாகம் 2

இன்று என்னை கவர்ந்த பாடல் :-

பாடல்:
கதிர் படு வயலின் உள்ள, கடி கமழ் புனலின் உள்ள,
முதிர் பயன் மரத்தின் உள்ள, முதிரைகள் புறவின் உள்ள,
பதிபடு கொடியின் உள்ள, படி வளர் குழியின் உள்ள,
மதுவளம் மலரில்கொள்ளும் வண்டென மள்ளர் கொள்வார்.

பொருள்:-
நல்ல வயலில் கதிர்விட்டு நிற்கும் இருக்கும் தானியங்களையும்; நறுமணம்
கொண்ட பொய்கைகளில் பூத்து நிற்கும் மலர்களையும்; மரங்களிலேயே முதிர்ந்து நிற்கும் பழங்களையும்; புன்செய் நிலத்தில் விளையும் பயறு வகைகளையும்; வீட்டில் கொல்லையில் உள்ள கொடிகளில் காய்த்த
காய்களையும்; நிலத்தில் குழிகளில் விளையும் கிழங்குகளையும், ஒவ்வொரு மலராகச் சென்று எடுத்துக் கொள்ளும் தேனீக்களைப் போல, மள்ளர்கள் ஆங்காங்கே சென்று சேகரித்து வருவர்

என்ன ஒரு அழகான விஷயங்கள். இவற்றை படிக்கும் பொழுதே , அவை ஒவ்வொன்றும் நம் கண் முன்னே வருகின்றன. இதை தவிர வேறென்ன வெற்றி ஒரு சிறந்த கவிதைக்கு இருக்க முடியும்.

அன்புடன்,
பெருமாள்.

Tuesday, June 1, 2010

கலர் கண்ணாடி !

சிறு வயதில் திருவிழா காலங்களில் பல வண்ணங்களில் கண்ணாடிகள் கிடைக்கும். மஞ்சள், பச்சை, சிவப்பு, கருப்பு என பல வண்ணங்கள். ஒரே பொருளை ஒவ்வொரு கண்ணாடி அணிந்து பார்ப்பது ஒரு ஆனந்தம் ! அந்த சிறு வயது விளையாட்டினுள் ஒளிந்திருக்கும் பெரிய உண்மையை இபோது தான் உணர முடிகிறது.

யாரையும், எந்த பொருளையும் நம் எந்த கலர் கண்ணாடி அணிந்து பார்கிறோம் என்பதை பொறுத்தே அவர்களை பற்றி நம் மனம் ஒரு முடிவுக்கு வருகிறது. நியாமாக பார்த்தால் நிறம்அற்ற கண்ணாடி அணிந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் நம்மில் பலரால் அது முடிவதில்லை. ஏதோ ஒரு காரணத்தால்ஏதோ ஒரு கலர் வந்து விடுகிறது. அது சரியோ, தவறோ தெரிய வில்லை.

ஆனால் காலம் நம்மை அத்தோடு விட்டு விடுவதில்லை. நமக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குடுக்க படுகின்றன. அவற்றிலாவது நாம் நம் கலர் கண்ணாடியை அகற்ற வேண்டும். இல்லையெனில் உண்மையை பொய் என நம்பி ஏமாறலாம். நன்மையை தீமை என்று எண்ணி ஒதுங்கி விடலாம். வாழ்வின் நல்லதொரு வாய்ப்பை இழக்க நேரிடலாம். வாழ்வின் மோசமானதொரு வழியை தேர்ந்தெடுக்கலாம்.

என்னை சுற்றி இருக்கும் என் நண்பர்கள், உறவினர்கள் மீது எனக்கு அடிக்கடி கோபம் வருவதுண்டு, அப்போதெல்லாம் சற்றே நிதானபடுத்தி என் கலர் கண்ணடியை கழட்டி வைத்து விட்டு பார்க்க தொடங்கி உள்ளேன். அதன் மூலம் நான் கண்ட உண்மை இது தான், அவர்கள் எல்லோரும் நல்லவர்களே ! அவர்களை பற்றிய என்னுடைய புரிதலே தவறு. அனைவரும் என்னை போலவே இருக்க முடியாது, இருந்தால் அது மானுடம் அன்று. ஆனால் கலர் கண்ணாடியை கழற்றி பார்த்தாலும் சில பேர், சில விஷயங்கள் தவறாகவே இருக்கின்றன ! அவற்றை பற்றிய என்னுடைய புரிதல் சரியே.

எனவே நண்பர்களே, உங்களுக்கு ஒரு விஷயத்தின் மேலோ, ஒரு மனிதரின் மேலோ , கோபமோ, மாற்று கருத்தோ வந்தால், உடனே கலர் கண்ணாடி உங்கள் மனக்கண்ணில் இருக்கிறதா என்று பாருங்கள். இருந்தால் அதை கழற்றி வைத்து விட்டு மீண்டும் பாருங்கள். உங்களுக்கு ஒரு நல்ல புரிதல் கிடைக்கும்.

அன்புடன்,
பெருமாள்.


Sunday, May 30, 2010

கம்பன் ஒரு வித்தன் - பாகம் 1

தமிழ் நல் உலகிற்கு கம்பன் ஒரு வரம், அவன் அளித்த கொடைகம்பராமாயணம். கம்பராமயணத்தை ஒரு இறை காவியமாக மட்டும் படைக்காமல், தமிழ் சுவை கொண்ட ஒரு இலக்கிய காவியமாகவும் படைத்திருக்கிறான் கம்பன் ! "கம்பன் வீடு கட்டு தறியும் கவி பாடும்" என்பது சற்றே மிகை படுத்தி சொல்வது போல் ஆனாலும், கம்பன் அதற்கு உரியவனே !

கம்பராமயணத்தை விமர்சனம் செய்ய கிளம்பியவர்கள் அதிகம். அவர்கள் அனைவரும் இறுதி இல் கம்பனின் சொல்வன்மைக்கு அடிமையே, கண்ணதாசன் உட்பட. கம்பராமாயணத்தின் புகழை பரப்பிய பெருமை திராவிட இயக்கத்தை சாரும். கம்பராமாயண எதிர்ப்பு என்ற பெயரில், அவர்கள் செய்த அனைத்தும் கம்பராமாயணத்தின் புகழை மென்மேலும் மெருகேற்றியது. அவர்களே அறியாமல் , அவர்கள் தமிழுக்கு செய்த ஒரே நல்ல விஷயம் அது தான் ! போகட்டும், அரசியல் இங்கே வேண்டாம்.

முழுவதுமாக கம்பராமயணத்தை படிக்க தொடங்கி இருகிறேன் நான். பல இடங்களில் கம்பன் என்னை வியக்க வைக்கிறான். அவற்றில் சில வற்றை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனவே கம்பன் ஒரு வித்தன் ஒரு தொடர் பதிவு.

பாடல்:
வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;
திண்மை இல்லை, ஓர் செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;
ஒண்மை இல்லை, பல் கேள்வி ஓங்கலால்.


பொருள்:
கோசல நாட்டின் பெருமை பற்றி சொல்லும் பொழுது, "அங்கே வள்ளல் தன்மை என்பதே இல்லை ஏனென்றால் வறுமையே இல்லை . வீரமே இல்லை, ஏனென்றால் எதிரிகள் என்று யாருமே இல்லை. உண்மையே இல்லை , ஏனென்றால் பொய் பேசுபவர்கள் யாருமே இல்லை. ஆகவே, உண்மை என்பது தனிச்சிறப்பு உள்ள ஒன்றாகக் கருதப்படவில்லை. அறிவுடைமையே இல்லை, ஏனென்றால் எல்லோரும் பல பெரியவர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொண்ட கேள்விச் சிறப்பு கொண்டவர்களாக இருந்ததால், ‘இன்னார் அறிவில் சிறந்தவர்’ என்று தனித்துச் சொல்ல முடியவில்லை " என்று கூறுகிறான்.

ஒவ்வொரு அடி இன் முதல் பகுதியை பாருங்கள். வள்ளல் தன்மை இல்லை, வீரம் இல்லை, உண்மை இல்லை, அறிவு இல்லை என்று ஏதோ வசை படுவது போல் சொல்லி விட்டு, மறு பாதி பாட்டில் வைத்திருக்கிறான் முடிச்சை ! இதை கம்பன் குசும்பு என்று சொல்லவே தொன்றுகிறது. ஆனால் தமிழ் சுவை கொண்ட குசும்பு. ரசிக்க வேண்டிய குசும்பு !

கம்பன் புகழ் வாழ்க ! மீண்டும் சந்திபோம் .

அன்புடன்,
பெருமாள்.

Sunday, May 9, 2010

நீயன்றி நானில்லை !

"எவள் இல்லையென்றால் நான் இந்த பூமிக்கு வந்திருக்க முடியாதோ,எவளை இழந்து விட்டால் என்னால் திரும்ப பெற முடியாதோ , அவளே என் தாயாவாள் " - கண்ணதாசன்.

இவ்வுலகில் எல்லா ஜீவராசிகளிடத்தும் காண முடிந்த பொதுவான ஒன்று தாய்மை. அது ஆடோ, மாடோ, குருவியோ , காக்காவோ, குரங்கோ, மனிதனோ யாராக இருந்தாலும் தாய்மையை காணாமல் இருந்திருக்க முடியாது. தாய்மையின் பெருமை பற்றி சொல்வது அவசியமற்றது. அத்தகைய உன்னதமான தாய்மை குணத்தை கொண்டுள்ள தாய்மார்களை போற்றும் இந்நாளில் என் அன்பான வாழ்த்துக்களை என் தாய்க்கும் அனைத்து தாய்மார்களுக்கும் காணிக்கை ஆக்குகிறேன். தாயே , உன் அன்புக்கு ஈடு இணை எதுவுமே இல்லை. உன் கையால் கிடைக்கும் வெறும் சோற்றின் சுவை வேறு எந்த உணவுக்கும் இல்லை. உன் அன்புக்கு நான் அடிமை. நீயன்றி நானில்லை !

இந்த புனிதமான நாளில், வருத்தத்திற்கு உரிய ஒரு செய்தியையும் சொல்ல வேண்டும். தாய்மை மகத்துவம் புரியாத இக்கால "நாகரீக" அம்மணிகள் சிலர் குழந்தை பராமரிப்பை சுமையாக கருதி வருவது வருத்தத்திற்கு உரிய செய்தி. உங்களுக்கு என் வேண்டுகோள் "தயவு செய்து குழந்தை பெற்று கொள்ளாதீர்கள்." உங்களுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது .

அன்புடன்,
பெருமாள்.

Tuesday, April 27, 2010

சிறந்த முன்னுதாரணம் !

நல்ல செய்தி ! நம் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதுமாக பிளாஸ்டிக் ஒழிக்க பட்ட மாவட்டமாக அறிவிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் ஒன்று முதல் அதை அமல் படுத்தி, இது வரை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. பிளாஸ்டிக் புழக்கத்தை கண்காணிக்க ஒரு குழு இருபத்தி நன்கு மணி நேரமும் செயல் பட்டு வருகிறது. பிளாஸ்டிக் பைகளை வைத்திருப்போருக்கு அந்த இடத்திலேயே அபராதம் வசூலிக்க படுகிறது. அந்த பைகளில் அச்சிடப்பட்டிருக்கும் வர்த்தக நிறுவனமும் தப்ப முடியாது, அவர்களுக்கு அபராத தொகை அதிகம் !

பொது மக்களுக்கு இது சற்றே தலை வலி என்றாலும், மக்கள் பிளாஸ்டிக் இல்லா நடை முறை வாழ்கைக்கு பழகி விட்டனர். எல்லா கடைகளிலும் இப்போது பேப்பர் அல்லது இலைகளே பேக் செய்ய பயன் படுத்துகின்றனர். குப்பை தொட்டிகளில் கூட பிளாஸ்டிக் பைகளை அவ்வளவாக காண முடிவதில்லை.

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் பாராட்டுக்கு உரியதே ! பெயர் அளவுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு என்று சொல்லி நின்று விடாமல், மக்களை பிளாஸ்டிக் புழக்கம் இல்லா வாழ்க்கைமுறைக்கு மெதுவாக கொண்டு செல்லும் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் ! வெற்றி பெற வேண்டும்.

பல விஷயங்களில் முன்னோடி மாவட்டமாக விளங்கும் கன்னியாகுமரி, பிளாஸ்டிக் ஒழிப்பிலும் முன்னோடியாக விளங்கும் !

அன்புடன்,
பெருமாள்

Wednesday, April 14, 2010

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

யாரு என்ன சொன்னாலும் சரி.. எங்களுக்கு தமிழ் புத்தாண்டு இன்னிக்கு தான் !

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ! இந்த வருடம் அமைதி, அன்பு மற்றும் வெற்றிகளை அனைவருக்கும் வாரி வழங்கட்டும் !

அன்புடன்,
பெருமாள்.

Thursday, April 8, 2010

அரசியல் பகடைகள் - அசிங்கம் பிடித்த அரசியல்வாதிகள்

ஏதோ பொறி வைத்து ஒரு எலி கூட்டத்தை வேட்டையாடியது போல, நூறு படை வீரர்களை சில நொடிகளில் கொன்று சென்று விட்டனர் நக்சல் கூட்டம். இந்திய மண்ணிலேயே பிறந்து, இந்திய படை வீரனையே கொன்று இன்பம் காணும் இந்த காட்டு மிராண்டிகளை என்னவென்று சொல்வது? ஆமா, சானியா வே பாகிஸ்தான் காரனுக்கு இரண்டாவது பொண்டாட்டியாக போக தயார், பின்ன இந்த படிப்பறிவு இல்லாத நக்சல் கூட்டத்தை குற்றம் சொல்லி என்ன பயன்?

இவ்வளவு நடந்த பின்பும், இந்திய அரசு பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அறிவிப்பு விடுத்திருக்கிறது. பேச்சுவார்த்தை நடத்த அவர்கள் என்ன அற வழி போராட்டமா நடத்துகிறார்கள். நடந்தது உயிர் கொலை ! இவர்களுடன் பேச ஒன்றுமே இல்லை, கூண்டோடு சுட்டு தள்ளுவதை தவிர. இன்னும் இவர்களுக்கு பரிந்து பேசும் அசிங்கம் பிடித்த அரசியல்வாதிகள் , பத்திரிகை என ஒரு ஜால்ரா கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அவர்களுக்கு இந்த என்பது வீரர்களின் இழப்போ, இறந்த வீரர்களின் குடும்பமோ கண்ணனுக்கு தெரியாது... எல்லாம் சாதி ஓட்டுக்கள் மட்டுமே. இவர்களின் அசிங்கம் பிடித்த அரசியலில் பகடை காய்கள் இந்த அப்பாவி வீரர்கள்.

வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு என் சிரம் தாழ்ந்த அஞ்சலி. என்றோ ஒருநாள் இந்த மரணங்களுக்கு இந்த அரசும், அமைச்சர்களும், நிர்வாகமும் பதில் சொல்லியே தீர வேண்டும். தீவிரவாதம் , நக்சலிசம் இவற்றை பிஜேபி அரசு மிகவும் சிறப்பாக அடக்கி ஆண்டது என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை ! அந்த விஷயத்தில் இந்த அரசு ஒரு சொரணை இல்லாமலே இருக்கிறது. விஷயத்தின் தீவிரத்தை அவர்கள் உணர இன்னும் எத்தனை அப்பாவி உயிர்கள் மடிய வேண்டுமோ தெரிய வில்லை :-(

வருத்ததுடன்,
பெருமாள்.

Sunday, March 28, 2010

சுசன் போயல் !

வெளி தோற்றத்தை கண்டு ஒருவரின் திறமையை மதிப்பிட கூடாது என்பதற்கு சுசன் போயல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ! கீழ் கண்ட வீடியோ மேல் சொன்ன செய்திக்கு ஆதாரம் !

http://www.youtube.com/watch?v=RxPZh4AnWyk&feature=related

அன்புடன் ,
பெருமாள்

பெண் - நீ ஒரு மாய இன்பம் !

இறைவன் படைப்பில் மிகவும் அழகான விஷயம் பெண் ! மிகவும் ஆபத்தான விஷயம் பெண் ! மிகவும் குழப்பமான விஷயம் பெண் ! மிகவும் கஷ்டமான விஷயம் பெண் ! மிகவும் சுவாரஸ்யமான விஷயம் பெண் ! அதனால் தான் எல்லா ஆண்களும் ஒரு குறிப்பிட்ட வயது பருவத்தில் பெண்களிடம் விழுந்து விடுகிறோம். யாரும் இதில் தப்பியதில்லை.

அழகான பெண்களை பார்க்கும் போது, இவளுக்காக எதையும் பண்ணலாம் என்று தோணும். அதே பெண்களை வேறு சில சமயம் பார்க்கும் பொது, கருமம் இவளுக்காகவா அலைந்தோம் என்று தோணும். அதுவும் அந்த பெண் வேறு ஒரு ஆணுடன் சிரித்து பேசினால் இந்த வெறுப்பு சற்றே அதிகமாக இருக்கும். இது ஒரு மாய உலகம். இந்த வயதில் இப்படி தான் இருக்கும் போல... ஆனால் ஆண்டவனின் படைப்பின் விந்தை தான் இது. இது முழுதும் உடல் சார்ந்த விஷயம் அல்ல... அதே நேரம் முழுதும் மனம் சார்ந்த விஷயமும் அல்ல. சில சமயம் உடல் சொல்வதை மனம் கேட்பதில்லை , பல சமயங்களில் மனம் சொல்வதை உடல் கேட்பதில்லை. மிகவும் கடினமான விஷயம் இவற்றை தாண்டி வருவது !

யுவதிகளுக்கும் இதே மாயா இருக்கும் என்று நினைக்கிறேன் ! உடலும் மனமும் மானுடம் தானே ! இதில் ஆண் என்ன பெண் என்ன ! நான் மேல் சொன்ன விஷயங்களும் காதலும், காமமும் மிக நெருங்கிய தொடர்புடையவை ! காமம் இல்லாத காதல் இல்லை ! இவை இரண்டு பற்றி பேச நிறைய இருப்பதால் தனி பதிவாக இடுகிறேன் !

இன்பமான குழப்பத்துடன்,
பெருமாள்.

இது தான் ஜனநாயகம் !

சில மாதங்களுக்கு முன்பு, ஒரு செய்தி தொலைக்காட்சி குஜராத் கலவரங்கள் பற்றி விவாதம் நடத்தியது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், நரேந்திர மோடி, மற்றும் இரண்டு காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி அது. வழக்கம் போல பொத்தாம் பொதுவாக மோடி ஒரு கொலைகாரன் என்று வசை பாடி கொண்டே இருந்தனர் அந்த இரு காங்கிரஸ் தலைகள். ஆனால் மோடி கேட்ட ஒரே ஒரு கேள்விக்கு பிறகு அவர்கள் இருவரும் வாய் திறக்கவில்லை. மோடி கேட்ட கேள்வி இது தான். கலவரம் தொடங்கிய இரண்டாவது நாளே மோடி ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, கூடுதல் போலீஸ் படை கேட்டுள்ளார். தொடர்ந்து இரண்டு நாட்கள் கேட்டும், ராஜஸ்தான் காங்கிரஸ் முதலமைச்சர் அலுவலுகம் ஒரு பதிலையும் தர வில்லை. அரசியல் ஆதாயங்களுக்காக மக்களின் உயிரை பணயம் வைத்தவர்கள் மோடியை கொலைகாரன் என்று சொல்லிய அவலம் இது !

எவ்வளவோ செய்தும் எட்டு வருடங்களாக இவர்களால் ஒன்றும் செய்ய முடிய வில்லை. மோடியும் தொடர்ந்து நடந்த எல்லா தேர்தல்களிலும் அசைக்க முடியாத வெற்றியை கண்டு விட்டார். இது தான் உண்மை வெற்றி. இன்று அதில் ஒரு படியாக இது வரை எந்த முதலமைச்சரும் செய்யாத, இனிமேலும் செய்ய தெம்பில்லாத ஒன்றை செய்து விட்டார். ஒன்பது மணி நேர முழு விசாரணைக்கு ஒரு முதலமைச்சர் சம்மன் அனுப்பிய இரண்டே நாட்களில் ஒத்துக்கொண்டு முடித்தும் கொடுத்திருக்கிறார். இது அவர் மேல் அவர் வைத்திருக்கும் நம்பிக்கை மட்டும் அல்ல... ஜனநாயகத்தின் மேல் அவர் வைத்திருக்கும் நம்பிக்கை.. நீதி துறை மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கை. இது தான் ஜனநாயகம் !

விரைவில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்று உச்ச நீதிமன்றம் சொல்லும். உண்மை வெல்லும !

அன்புடன்,
பெருமாள்

Sunday, February 28, 2010

விண்ணை தாண்டி வருவாயா ! - வர மாட்டாள் :-)

மிகவும் எதிர் பார்க்க பட்ட திரைப்படம் என்பதால், அவ்வளவு எளிதாக டிக்கெட் கிடைக்க வில்லை. சண்டே காலை எட்டு மணி ஷோ !! ரொம்ப கஷ்டம்... இருந்தாலும் சரியாக சென்று விட்டோம்.

காதல் - சரி.. தவறு என்பதை விட்டு பார்த்தால்... காதல் எல்லாருக்கும் மானா வாரியாக வரும் ஒரு நோய். ஒரே வித்தியாசம் எவ்வளவு சீரியஸ் ஆக எடுத்து கொள்கிறோம் என்பது தான். சரி, விண்ணை தாண்டி வருவோம்.. எளிதாக படத்தின் கதையை சொன்னால்.. ஜெஸ்ஸி க்காக பைத்தியமாய் அலையும் கார்த்திக்... குடும்ப பெண்ணாக ஜெஸ்ஸி. நன்றாக காதலித்து விட்டு , கடைசி இல் ஆப்பு வைத்து விட்டு, அமெரிக்கா சென்று ஒரு இளிச்சவாயனை திருமணம் செய்து கொள்கிறாள். (வழக்கமான நம்ம ஊரு காதல் முடிவே ) ஒரே நல்ல விஷயம், கார்த்திக் அவளை நினைத்து தாடி எல்லாம் வச்சுகாம ஒழுங்கா டைரக்டர் ஆகி ஜெஸ்ஸி பத்தி படமா டைரக்ட் பண்றார். அது என்னவோ ஜெஸ்ஸி வச்ச ஆப்பு .. ஆப்பு தான்.
ஒரு விஷயம்.. என்ன தான் காதல் பத்தி தெரிஞ்சாலும், நம்ம பசங்க யாரும் காதலிக்காம இருக்க போறதில்ல.. ஜெஸ்ஸி நல்ல பொண்ணு தான்.. இருபத்தி மூணு வருஷம் பாத்துகிட்ட அப்பா, அம்மா எல்லாத்தையும் ஒரே வருஷம் பழகின கார்த்திக் காக விட்டுட்டு வர முடியாது.... வர கூடாது... கார்த்திக் தான் லூசு பய..
ஆகவே மக்களே, உங்களுக்கு உள்ள கார்த்திக் இருந்தா அவன விரட்டி விட்டுருங்க... இல்லேன உங்களுக்கும் ஆப்பு தான்..
விண்ணை தாண்டி வருவாயா - வர மாட்டா மச்சி... வர மாட்டா !

அன்புடன்,
பெருமாள்.

Wednesday, January 20, 2010

தலை வணங்குகிறேன் !

கடந்த பத்து வருடங்களில் நமது சமுதாயம் பெரிய மாற்றங்களை கண்டுள்ளது. குறிப்பிட தக்க மாற்றங்களில் ஒன்று பெண் சமுதாய மாற்றம். பெண்களுக்கு கல்வி, வேலை, பதவி என வரவேற்க தக்க மாற்றங்கள் உட்பட. இவைகளுடன் பெண்களின் நடை, உடை மற்றும் பாவனைகளும் வெகுவாக பலரிடம் மாறி உள்ளன. இவை சரி அல்லது தவறு என்று சொல்வதற்கில்லை. கல்வி, வேலை வந்தாலும் நமது பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் மறக்காத பெண்களை பார்க்கும் போது வரும் மரியாதையும், சந்தோசமும் ; அவற்றில் இருந்து மாறி விட்ட பெண்களை பார்க்கும் போது வருவதில்லை என்பது உண்மையே !
தினமும் டைடெல் பார்க்கில் மேலே சொன்ன இரண்டு விதமான பெண்களையும் பார்கிறேன். வெகு சிலரே மரியாதைக்கு உரியவர்கள் ஆகிறார்கள் என்பது வருத்தத்திற்கு உரிய செய்தியே ! ஆடை உடலை மறைக்க என்பது மாறி , ஆடை உடலை அரை குறையாக காட்ட என்று நினைக்க வைக்கும் நவ நாகரீக பெண்கள் அதிகமே ! அதிலும் சமீபமாக ஏதோ பத்து வயது சிறுமிக்கு தைத்தது போல உடலோடு ஒட்டி கொண்டது போல சுடிதார் அணிகிறார்கள். அதை பார்க்கும் போது நீச்சல் உடையை தான் ஞாபக படுத்துகிறது . அடித்து சொல்கிறேன் ... அப்படி அணிவது கண்டிப்பாக அவர்களுக்கு சௌகர்யமாக இருக்கவே இருக்காது... ஏதோ வைத்து இறுக்கமாக கட்டியது போலவே இருக்கும். பின்னே ஏன் இந்த மாதிரி உடைகள். ஒருவன் பார்க்க வேண்டிய உடலை உலகம் பார்க்க காட்டுவது தான் இவர்கள் நாகரீகம் என்றால் , அதை நான் காரி உமிழ்கிறேன்.

இந்த மாதிரி பெண்கள் மத்தியில் கூட, பார்பவர்கள் மதிக்க தக்க வகையில் ஆடை அணியும் பெண்களை நான் தலை வணங்குகிறேன். நீங்கள் வாழ்க !

அன்புடன்,
பெருமாள்