சிறு வயதில் திருவிழா காலங்களில் பல வண்ணங்களில் கண்ணாடிகள் கிடைக்கும். மஞ்சள், பச்சை, சிவப்பு, கருப்பு என பல வண்ணங்கள். ஒரே பொருளை ஒவ்வொரு கண்ணாடி அணிந்து பார்ப்பது ஒரு ஆனந்தம் ! அந்த சிறு வயது விளையாட்டினுள் ஒளிந்திருக்கும் பெரிய உண்மையை இபோது தான் உணர முடிகிறது.
யாரையும், எந்த பொருளையும் நம் எந்த கலர் கண்ணாடி அணிந்து பார்கிறோம் என்பதை பொறுத்தே அவர்களை பற்றி நம் மனம் ஒரு முடிவுக்கு வருகிறது. நியாமாக பார்த்தால் நிறம்அற்ற கண்ணாடி அணிந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் நம்மில் பலரால் அது முடிவதில்லை. ஏதோ ஒரு காரணத்தால்ஏதோ ஒரு கலர் வந்து விடுகிறது. அது சரியோ, தவறோ தெரிய வில்லை.
ஆனால் காலம் நம்மை அத்தோடு விட்டு விடுவதில்லை. நமக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குடுக்க படுகின்றன. அவற்றிலாவது நாம் நம் கலர் கண்ணாடியை அகற்ற வேண்டும். இல்லையெனில் உண்மையை பொய் என நம்பி ஏமாறலாம். நன்மையை தீமை என்று எண்ணி ஒதுங்கி விடலாம். வாழ்வின் நல்லதொரு வாய்ப்பை இழக்க நேரிடலாம். வாழ்வின் மோசமானதொரு வழியை தேர்ந்தெடுக்கலாம்.
என்னை சுற்றி இருக்கும் என் நண்பர்கள், உறவினர்கள் மீது எனக்கு அடிக்கடி கோபம் வருவதுண்டு, அப்போதெல்லாம் சற்றே நிதானபடுத்தி என் கலர் கண்ணடியை கழட்டி வைத்து விட்டு பார்க்க தொடங்கி உள்ளேன். அதன் மூலம் நான் கண்ட உண்மை இது தான், அவர்கள் எல்லோரும் நல்லவர்களே ! அவர்களை பற்றிய என்னுடைய புரிதலே தவறு. அனைவரும் என்னை போலவே இருக்க முடியாது, இருந்தால் அது மானுடம் அன்று. ஆனால் கலர் கண்ணாடியை கழற்றி பார்த்தாலும் சில பேர், சில விஷயங்கள் தவறாகவே இருக்கின்றன ! அவற்றை பற்றிய என்னுடைய புரிதல் சரியே.
எனவே நண்பர்களே, உங்களுக்கு ஒரு விஷயத்தின் மேலோ, ஒரு மனிதரின் மேலோ , கோபமோ, மாற்று கருத்தோ வந்தால், உடனே கலர் கண்ணாடி உங்கள் மனக்கண்ணில் இருக்கிறதா என்று பாருங்கள். இருந்தால் அதை கழற்றி வைத்து விட்டு மீண்டும் பாருங்கள். உங்களுக்கு ஒரு நல்ல புரிதல் கிடைக்கும்.
அன்புடன்,
பெருமாள்.
Subscribe to:
Post Comments (Atom)
Life is a glass using which we are seeing others..If you get a chance to read a book called Saint surfer and CEO by robin sharma...Read it in this part the saint says about this....He also says life is growth school in which you will graduate or getted passed to next level only if we learn from the situation...There are some amazing insight...This one too....
ReplyDeleteRombha yosikireengha sir. Please drink a glass of water. You'll be alright :); Let me tell you something else....nothing is right and nothing is wrong(this is not by me--This is root of avaitic principle) ; So it doesn't matter what glass you are wearing if at all you are wearing one;
ReplyDelete-Srini