Sunday, November 13, 2011

சித்திரப் பாவை - ஆழமான படைப்பு

சித்திரப் பாவை - 1968 இல் அகிலனால் படைக்க பெற்ற நாவல். மு. வ அவர்களின் அல்லி, வாடாமலர் போன்ற சமூக படைப்புகளுக்கு பிறகு என்னை மிகவும் பாதித்த படைப்பு இது.

சித்திரப் பாவை இல் இருந்து சில,

"அழகாக வாழ கற்றுக் கொள்; முடிந்தால் வாழ்கையை அழகு படுத்து; முடியாவிட்டால் அதை அசிங்கபடுத்தமாலவது இரு"

"அன்பு உடலை பற்றியதாகவே இருந்தாலும் கூட அதையும் அழகாக சுவைக்க ஐந்து புலன்களைஅல்லவோ ஆண்டவன் மனிதருக்கு கொடுத்திருக்கிறான். தோட்டத்து அணில்களும் பறவைகளும் கன்று காலிகளான மிருகங்களும் கூட இயற்கையில் அவற்றின் காதலின்பத்தை ஒரு அருங்கலையாக அல்லவா கற்றிருகின்றன. உடல் வேட்கை மட்டும் அல்ல காதல்."

"கலை என்றால் மறைக்க வேண்டியதை மறைத்து வெளிபடுத்த  வேண்டியதை மட்டும் வெளிபடுத்த  வேண்டும். அப்போது தான் அதில் அழகு இருக்கும். வாழ்கை இல் விகாரம் இருந்தால் கூட, கலைஞன் அதை மெருகு படுத்தி குடுக்க வேண்டும். "

இன்றைய சமுதாயம் கண்டிப்பாக படிக்க வேண்டிய படைப்பு இது. வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக படிங்கள்.

அன்புடன்,
பெருமாள்.

Saturday, October 22, 2011

வாழ்க்கை பயணத்தை எளிதாக்க முயல்வோம் !

ஆங்கிலத்தில் ஒரு அருமையான சொற்றொடர் உண்டு.. அது " When the going gets tougher, tough becomes going". உண்மையான வார்த்தைகள் இவை. வாழ்க்கை இல் பிரச்சனைகள் என்பது பிரிக்க முடியாத அங்கம். பிரச்சனைகளை விட்டு விலகி செல்லாமல் அவற்றை நம்மோடு கலந்து விட செய்வதே உண்மையான வெற்றி. பிரச்சனைகளை தள்ளி வைத்திருக்கும் பொது, அவை நம்மை நோக்கி வந்து விடுமோ என்ற அச்சம் இருக்கும், பிரச்னை உங்களுடனே இருக்கும் பொது அந்த பயம் இருக்காது. பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டிய சக்தி வளரும்.

அனேக சமயங்களில் எனக்கு இந்த கவலை வந்தது உண்டு... எனக்கு மேலே, என்னை விட நல்ல நிலைமை இல் இருக்கும் மனிதர்களை பார்த்து , என்னால்  அவர்களை போலே இருக்க முடியவில்லையே என்று .... ஆனால் இப்போது  எனக்கு இந்த எண்ணம் தோன்றும் பொது, உடனே தோன்றும் இன்னொரு விஷயம் இது தான்.... எனக்கும்  கீழே இருக்கும் மனிதனுக்கு எனக்கு  கிடைத்தது கூட கிடைக்க வில்லையே என்பது தான். இன்று நான் இருக்கும் நிலைமை இல் என்னை வைத்ததற்கு ஆண்டவனுக்கு நன்றி சொல்கிறேன்.  நம் வாழ்கையை எப்படி வாழ வேண்டும் என்று முடிவு செய்வதற்கு நமக்கு முழு உரிமை இருக்கிறது... நமக்கு என்னவெல்லாம் கிடைக்க வில்லை என்பதனை நினைத்து புலம்பி கொண்டேவும் இருக்கலாம்... அல்லது கிடைத்தவற்றை நினைத்து மன மகிழ்ச்சியோடும் இருக்கலாம்... இந்த இரண்டில் எதை தேர்ந்தெடுப்பது என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.


ஒரே கால கட்டத்தில், ஒரே இடத்தில் இருக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு வகையான பிரச்சனைகள். இரவு சாப்பாடே கிடைக்குமா என்ற மனிதனுக்கு அருகிலேயே, இரவு சாப்பாடு எந்த ஹோட்டல் லில் சாப்பிடலாம் என்று கவலை படும் மனிதன் இருக்கும் நாடு இது.  பிரச்சனையே இல்லாத மனிதனை பார்க்க முடியாது. ஆனால் பிரச்சனைகளை நாம் கையாள வேண்டும்.. பிரச்சனைகள் நம்மளை கையாள விட்டால், வாழ்வில் நிம்மதி குறையும்.

உலக ஜீவராசிகள் அனைத்திற்கும் ஏதோ ஒரு பிரச்னை இருக்கத்தான் செய்யும்... பிரச்சனைகள் வாழ்வின் முடிவல்ல.. அவை வாழ்வின் ஒரு அங்கம்... அவற்றை இதமாக எதிர்கொள்வோம் ... வாழ்க்கை பயணத்தை எளிதாக்க முயல்வோம் !

அன்புடன்,
பெருமாள்.

Sunday, October 16, 2011

மானுடப்புரிதல்

மானுட வாழ்க்கை இன் முக்கிய ஆதாரம் புரிதல்; தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள புரிதல், கணவன் மனைவி இடையே ஆன புரிதல், நண்பர்களிட்யே புரிதல், அலுவலுகத்தில் உடன் வேலை செய்பவர்களியே புரிதல் ... என சொல்லி கொண்டே செல்லலாம்... இவற்றில் எதாவது ஒரு புரிதல் சரி இல்லை என்றால் ஒரு மனிதனுக்கு அந்த உறவு செழுமை பெறாது, பிரச்சனைகள் வளர ஆரம்பிக்கும், ஏமாற்றங்கள் பெருகும், நிம்மதி தொலையும். வாழ்வில் வெற்றி பெற்ற மனிதர்களிடம் கேளுங்கள்.. அவர்கள் வெற்றின் அடிப்படைகளில் ஒன்று புரிதலாக இருக்கும்... உங்களை சுற்றி இருக்கும் மனிதர்களை உங்களால்  நன்றாக புரிந்து கொள்ள முடிந்தால், உங்கள் வெற்றி அங்கு துவங்கி விடும். ஆனால் மனிதர்களை புரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல ! என்னென்றால் மனித மனம் ஒரு குரங்கு !!

மனிதர்களை புரிந்து கொள்வது ஓரிரு நாளில் நடந்து முடியும் விஷயம் அல்ல. அது முடிவில்லா அனுபவம்... இன்றும் கூட என் நெருங்கிய நண்பனை நான் முழுதும் புரிந்து கொள்ள முடியவில்லை.... ஆனால் அவனை பற்றிய ஒரு அடிப்படை புரிதல் எனக்கு இருக்கிறது... அந்த புரிதல் தான் எங்கள் உறவின் பலம்... அந்த அடிப்படை புரிதலை அடையவே கணிசமான காலம் தேவை பட்டது எங்களுக்கு.

நம்முடன் பழகும் ஒவ்வொருவரை பற்றியும் நமக்கு ஒரு கணிப்பு இருக்கும்... அந்த கணிப்பின் அடிப்படை இல் தான் நாம் அந்த நபருடன் பழக வேண்டிய நெருக்கத்தை முடிவு செய்கிறோம். அந்த கணிப்பு தான் நாளடைவில் புரிதலாக மாறுகிறது... அந்த கணிப்பு புரிதலாக மாறுவது அனுபவத்தின் அடிப்படை இல் ஆனது. இந்த நிகழ்வில் சில சமயம் நாம் ஏமாந்து போவதுண்டு.. அதை நாம் தவறான புரிதலில் உணர்கிறோம்.

சில சமயங்களில் நம் புரிதல் மேலேயே நமக்கு சந்தேகம் எழுவதுண்டு, அவை உண்மையாகவும் இருக்கலாம்.  அந்த சமயங்கள் மிகவும் தர்ம சங்கடமான காலங்கள், உண்மையான சோதனைகள். என் அனுபவத்தில் இருந்து நான் கற்று கொண்டது இது தான்.  உங்கள் புரிதலில் காலம் எழுப்பிய சந்தேகத்தை காலமே தீர்த்து வைக்க விட்டு விடுங்கள்... அந்த சந்தேகம் உங்களின் உன்னத உறவை உரசி பார்க்க விடாதீர்கள். பொறுமை தான் உங்களின் சக்தி..... அதை இழந்து விடாதீர்கள்.

அனேக சமயங்களில், நாம் நம்மை சுற்றி இருக்கும் நண்பர்களையோ, உறவினர்களையோ, சக அலுவலர்களையோ நாம் எதிர்பார்க்கும் வகையில் நடந்து கொள்ள எதிர்பார்கிறோம். அவர்கள் அந்த எதிர்பார்ப்பை விட்டு விலகி சென்றால், அவர்களை பற்றிய நமது புரிதல் கேள்வி குறியாகிறது. அவர்கள் உங்களை காய படுத்தி விட்டதாக உணர்கிறீர்கள். ஆனால் ஏன் அவர்கள் நீங்கள் எதிர்பார்த்தது போல் நடக்க வில்லை என்பதை நீங்கள்  உணர்ந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அது அவர்களை பற்றிய உங்களின் புரிதலை மேலும் பலபடுத்தும்.

எந்த உறவாக இருந்தாலும், முடிந்தவரை எதிர்பார்ப்பை குறைத்து கொள்ளுங்கள். அது ஏமாற்றங்களை குறைக்கும்.. உறவுகளை இழக்க வேண்டி இருக்காது.

அன்புடன்,
பெருமாள்.

Friday, March 4, 2011

இது தான் சென்னை !

சென்னை நகரமே ஒரு சர்வகலா சாலை. எங்கு பார்த்தாலும் புத்தகங்கள், சபைகள், சங்கங்கள் ! மூர் மார்க்கெட்டில் மட்டும் சுமார் முப்பது பழைய புத்தக கடைகள் இருக்கும்.  நூலகங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது... இவ்வளவையும் இங்குள்ள மக்கள் பயன்படுத்துகிறார்கள். சென்னைவாசிகள் கள்ளம் கபடமற்று இருப்பதனால் தான் அவர்கள் உள்ளத்தில் உண்மையான  கலை முயற்சி பிறக்கிறது.

(கு.அழகிரிசாமி கடிதங்கள்-கி.ரா விற்கு எழுதியது . நாள்- 16-11-1944)


Sunday, October 31, 2010

இப்போது எனக்கு வேண்டிய வைத்தியம் !

மோகத்தைக் கொன்றுவிடு , அல்லா லென்றன் மூச்சை நிறுத்திவிடு
தேகத்தைச் சாய்த்துவிடு , அல்லாலதில் சிந்தனை மாய்த்துவிடு
யோகத் திருத்திவிடு , அல்லா லென்றன் ஊனைச் சிதைத்துவிடு
ஏகத் திருந்துலகம் , இங்குள்ளன யாவையும் செய்பவளே !

                                                                                                                                                                                         பந்தத்தை நீக்கிவிடு , அல்லாலுயிர்  பாரத்தைப் போக்கிவிடு
சிந்தை தெளிவாக்கு  , அல்லாலிதைச் செத்த உடலாக்கு
இந்தப் பதர்களையே , எல்லாமென எண்ணி இருப்பேனோ
எந்தப் பொருளிலுமே , உள்ளேநின்று இயங்கி யிருப்பவளே !

                                                                                                                                                                     
 உள்ளம் குளிராதோ , பொய்யாணவ ஊனம் ஒழியாதோ?
கள்ளம் உருகாதோ , அம்மா பக்திக் கண்ணீர் பெருகாதோ?
வெள்ளக் கருணையிலே , இந்நாய் சிறு வேட்கை தவிராதோ?
விள்ளற் கரியவளே  , அனைத்திலும் மேவி யிருப்பவளே!

 நன்றி - பாரதியார்

மோகத்தை கொல்வது எழிதல்ல. ஆனால் கொன்றே தீர வேண்டும். அன்னை பராசக்தி அந்த சக்தியை எனக்கு அருள்வாள் என்று நம்புகிறேன்.

அன்புடன்,
பெருமாள்
                                                                                                                                                                                                                           



Friday, October 1, 2010

என்ன கொடுமை சரவணன் இது !!

தன் காதலனை டெஸ்ட் செய்ய இந்த பொண்ணு என்ன பண்ணுது பாருங்க ....
http://www.youtube.com/watch?v=9ChKHoB-xno&p=9CA377CD5FA370C6&playnext=1&index=85

இனிமேல் இந்த வஸ்துவை பயன்படுத்தும் நவ நாகரீக அம்மணிகளை பார்த்து ஒரு கேள்வியை தாராளமாக கேட்கலாம்.. என்ன அது ????  இது தான் - " என்ன *** புடுன்குரீங்களா? "    ஹா ஹா ஹா

ஒரே காமெடி !!

அன்புடன்,
பெருமாள்.

Sunday, August 15, 2010

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

நண்பர்களே,

சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்!
ரத்தம் சிந்தி கிடைத்த சுதந்திரத்தை வியர்வை சிந்தியாவது காப்பாற்றுவோம்!
வந்தே மாதரம்!

அன்புடன்,
பெருமாள்.