மோகத்தைக் கொன்றுவிடு , அல்லா லென்றன் மூச்சை நிறுத்திவிடு
தேகத்தைச் சாய்த்துவிடு , அல்லாலதில் சிந்தனை மாய்த்துவிடு
யோகத் திருத்திவிடு , அல்லா லென்றன் ஊனைச் சிதைத்துவிடு
ஏகத் திருந்துலகம் , இங்குள்ளன யாவையும் செய்பவளே !
பந்தத்தை நீக்கிவிடு , அல்லாலுயிர் பாரத்தைப் போக்கிவிடு
சிந்தை தெளிவாக்கு , அல்லாலிதைச் செத்த உடலாக்கு
இந்தப் பதர்களையே , எல்லாமென எண்ணி இருப்பேனோ
எந்தப் பொருளிலுமே , உள்ளேநின்று இயங்கி யிருப்பவளே !
உள்ளம் குளிராதோ , பொய்யாணவ ஊனம் ஒழியாதோ?
கள்ளம் உருகாதோ , அம்மா பக்திக் கண்ணீர் பெருகாதோ?
வெள்ளக் கருணையிலே , இந்நாய் சிறு வேட்கை தவிராதோ?
விள்ளற் கரியவளே , அனைத்திலும் மேவி யிருப்பவளே!
நன்றி - பாரதியார்
மோகத்தை கொல்வது எழிதல்ல. ஆனால் கொன்றே தீர வேண்டும். அன்னை பராசக்தி அந்த சக்தியை எனக்கு அருள்வாள் என்று நம்புகிறேன்.
அன்புடன்,
பெருமாள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.